Friday, February 4, 2011

இலங்கையில் புதிய நாணயத்தாள்கள் வெளியீடு

இலங்கை மத்திய வங்கி இன்று இலங்கையின் 63வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது. "அபிவிருத்தி சுபீட்சம் மற்றும் இலங்கை நடனக் கலைஞர்கள்" என்ற தொனிப்பொருளில் புதிய நாணயத்தாள்களை இன்று வெளியீடு செய்வதாக இலங்கை மத்திய வங்கியின் நாணயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
புதிய தொடர்கள் ரூ.20 , ரூ.50, ரூ.100 , ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.5000  பெறுமதி கொண்ட நாணயத்தாள்களாக உள்ளடக்கின்றன . ஒவ்வொரு தாளும் முன்பக்கம் நாட்டின் சுபீட்சத்திற்கு பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளத்தைச் சித்தரிக்கிறது.
இதுவரை புழக்கத்தில் உள்ள நாணயத்தாள்கள் 10வது தொடராக 1991ல் அறிமுகம் செய்யப்பட்டவை. இவற்றில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார மாற்றங்களை வெளிக்காட்டும் குறியீடுகள் இல்லை.
இந்நிலையில் 11வது தொடராக இன்று அறிமுகம் செய்யப்படும் பண நோட்டுக்கள் ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1000, ரூ.5000 ஆகிய பெறுமதிகளைக் கொண்டவையாகவும் அமையும்.
இன்று அறிமுகம் செய்யப்படும் பண நோட்டுக்களின் முக்கிய வேறுபாடாக அவற்றின் நீளம் காணப்படுவதுடன் வர்ணம், வடிவமைப்பு போன்றவற்றினாலும் வேறுபட்டிருக்கும் என நாணயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் புதிதாதக ரூ.5000 பெறுமதியான பண நோட்டு அறிமுகம் செய்யப்படும் அதேவேளை முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட நோட்டுக்களில் ரூ.10, ரூ.2000 பெறுமதியான நோட்டுக்கள் இத்தொடரில் இருக்கவில்லை.
பொதுமக்கள் இப்புதிய நோட்டுக்களை வங்கிகளூடாக எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் நாணயத் திணைக்களம் அறிவித்துள்ளது.
>

1 comment:

  1. முக்கிய வேறுபாடாக அவற்றின் நீளம் பண நோட்டுக்களின் 5 mm வேறுபட்டிருக்கும்

    ReplyDelete